புதன், 13 அக்டோபர், 2010

ஒரு சில ஆட்டோக்களும் ஓவர் அழிச்சாட்டியங்க‌ளும்

ஒரு விஷயம் புரியல..!

இப்போ ஆட்டோ‍ மினிமம் சார்ஜே பதினேழு ரூபாய். அப்புறம் மீட்டருக்கு மேல 10,20 கேக்கிறது, ரிட்டர்ன் வரும் போது தனியா வரணும், சவாரி கிடைக்காதுனு சொல்றது, ராத்திரி 9 மணிக்கு மேல ஒன்றரை மடங்கு...பத்திக்கிட்டு வருது.

நான் தெரியாம தான் கேக்கறேன்... நாம எறங்கனப்புறம் ஆட்டோ எங்க போனா, எப்பிடிப் போனா நமக்கென்ன.? அதுக்காக நாம் என்ன சவாரி புடிச்சா அனுப்பி வைக்க முடியும்.? நமக்கு வேற வேலையே இல்லையா.?

இந்த‌ ஆட்டோக்களை எல்லாம் ஒழுங்குமுறைப்படுத்த அரசாங்கம் புதுசா என்ன பண்ணா நல்லாயிருக்கும்.?

என்ன தோணுதோ சொல்லுங்க.


என்றும் அன்புடன்,
பிரகாஷ் சேதுராமன்

கருத்துகள் இல்லை: