திங்கள், 4 அக்டோபர், 2010

வெள்ளிக்கிழமையும் ஸ்லீவ்லெஸ் டாப்ஸும்

சம்பவம்: சொந்த அனுபவம்
நடந்தது: ம்ம்..போன வெள்ளிக்கிழமை தான்


இந்த சாஃப்ட்வேர் கம்பெனி‍ல வேலை பாக்கிற பொண்ணுங்களுக்கு [எல்லாரையும் சொல்லலீங்க] வெள்ளிக்கிழமை வந்தா என்ன தான் ஆகுமோ, திங்கள் டூ வியாழன் சினேகா மாதிரி இருக்கிற பொண்ணு, திடீர்னு நமிதா மாதிரி ஆயிடுதுங்க.!

பசங்களும் எவ்வளவு நேரம்தான் பாக்காத மாதிரியே நடிக்கிறது.? ஆனா, இந்த மனித வள மேம்பாட்டுத் துறை ஆளுங்களுக்கு, பொண்ணுங்க இப்படி வர்றது உறுத்தாது: நாம கொஞ்சம், காலர் சின்னதா,கை ரொம்ப சின்னதா போட்டுட்டு போனா போதும், நம்மள எண்ணெய் இல்லாமலே சட்டியில போட்டு, வதக்கிருவாங்ய.! ஆனா இந்த வதக்கலுக்கு முன்னாடியே ஒரு பொண்ணு, ரொம்ப ஸ்டைலா, கழுத்தில்லாம்,கையில்லாம, ஏன்...இடுப்பே இல்லாம ஒரு டாப்ஸ போட்டுட்டு நடந்து போகும்..அதக் கேட்டா சொல்வாரு நம்ம ஹச்.ஆர் "தேட் இஸ் ஸ்லீவ்லெஸ், பார்ட் ஆப் அவர் ட்ரெஸ்கோட்"

என்னத்த சொல்ல..?


என்றும் அன்புடன்,
பிரகாஷ் சேதுராமன்

கருத்துகள் இல்லை: